வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, August 31, 2017

வேளாங்கண்ணி மாதாவே ...மன்னிப்பாயாக !

Image result for VELANKANNI MATHA IMAGE
ஆகஸ்ட்-29
நாகை மாவட்ட வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா 
லட்ச கணக்கில் பக்தர்கள் ... தேசம் முழுவதிலிருந்தும் ...
கூடும் பெரும் திருவிழா !
சிம் விற்பனைக்கும் ...BSNL  விளம்பரத்திற்கும் ...
திட்டமிடுங்கள் ...திட்டமிடுங்கள் ...
என பொதுமேலாளர் தலமட்ட அதிகாரிகளுக்கு ...
திரும்ப ...திரும்ப ...எடுத்து சொன்னார் ...
பலமுறை எடுத்து சொன்னார் ... பயனில்லை !

நாமும் ...பொதுமேலாளரிடம் ...
நீங்கள் சொல்லியும் ...அசைவில் வேகமில்லை ...
சரியான திட்டமிடல்  இல்லை என்றோம் ...

அதே போல் ...
வேளாங்கண்ணியில் EKYC  இல்லை ...
ஸ்டால் அமைக்க பேராலய நிர்வாகத்திடம் ...
அனுமதி பெறவில்லை ..
வெறும் 19 சிம் கார்டை TT  கையில் தந்துவிட்டு ..
மார்க்கெட்டிங் பணி நிறைவாம் !
எனவே ...

வேளாங்கண்ணி தாயே ...உன்னிடம் மன்றாடுகிறோம் !
ஆகஸ்ட் 29 திருவிழாவிற்கு ..
ஆகஸ்ட் 28 ல் அனுமதி கேட்டோம் கிடைக்கவில்லை ..
மேளாவிற்கு இடம் கிடைக்கவில்லை ...
எனவே எங்களால் சிறப்பான ...ஏற்பாடுகள் செய்யமுடியவில்லை 
அடுத்த திருவிழாவில் கட்டாயம் முன்னேற்பாடுகளை 
செய்கிறோம் ...
இப்பொழுது நாங்கள் செய்து இருப்பதையே 
BSNL ன்  முழுமையான  மார்க்கெட்டிங் திறமையென...ஏற்று 
எங்களை மன்னித்தருள்வாயாக !