வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, August 17, 2017

குழு உருவாக்கம்

3rd PRC மற்றும் DPE வழிகாட்டுதல் அடிப்படையிலும் ஊதிய உயர்வு வழங்கிடுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை வழங்க BSNL நிர்வாகம் கமிட்டி அமைத்துள்ளது .CLICKHERE

Wednesday, August 16, 2017

தோள் கொடுத்த ...தோழமை நெஞ்சங்கள் !


செல் டவர் பராமரிப்பில் ...விபத்தானான் ...முதுகெலும்பில் ..
ஒப்பந்த ஊழியர் தோழன் .அன்பு ...
ESI மூலம் மருத்துவம் தொடரலாம் என்றால் ?
குடந்தையில் விபத்தானவர்க்கு ...கன்னியாகுமரி மாவட்ட ESI ல் ...
வைத்தியம் பார்க்க ESI DISPENSARY முகவரியில் பணம் கட்டிய அவலம் ...
சிகிச்சை தொடர வேண்டும் ...
விழுந்த இடமோ  ...TOWER  ...தொழிலாளியோ ...POOR  ...
தோழமையாளர்களிடம் நிதி கோரினோம் ...தேடினோம் ...
NFTE -TMTCLU சார்பில் !
வஞ்சமில்லா நெஞ்சம் ...பஞ்சமில்லா தாராளம் ...
அள்ளி தந்தனர் தொகையாய்  ரூபாய்  .92,000
பொதுமேலாளர் திரு .வினோத் அவர்கள் தனது பங்களிப்பு ..ரூ 5000 
தந்து ...தோழர் அன்பு மனைவியிடம் ..
DGM (நிதி),DGM (CFA )AGM (HR ) முன்னிலையில் தொகை வழங்கினார்  .
மாவட்ட தலைவர் தோழர் .கணேசன் முன்னிலை வகித்தார் 
துயர்துடைக்க ...நிதி தந்த ...தோழமையாளர்களுக்கு நன்றி ...நன்றி !
பெரும்பங்காற்றிய திரு .கபிலன் SDE அவர்களுக்கும் நன்றி!! 

Tuesday, August 8, 2017

தொடரும் முயற்சிகள்


டெல்லி கருத்தரங்குக்கு பின் ..
TEPU சங்க முயற்சியால் ... திருச்சி சிவா MP மற்றும்
NFTE கூட்டணி சங்க தலைவர்கள்   ..
அமைச்சர் .திரு மனோஜ் சின்ஹா வை ...சந்தித்தனர்
தோழர் ND ராம் SEWA உடன் இருந்தார் ..
ஊதிய உயர்வு முயசிகள் தொடர்கிறது ...

Monday, August 7, 2017

டெல்லி கருத்தரங்கம்


டெல்லி கருத்தரங்கில் 
தோழர்கள் .காமராஜ் -நடராஜன் -அன்பு 
கலந்துகொண்டுள்ளனர் 

ஆர் .கே 75 -ல் ..வாழ்த்துமழை ..
Friday, July 28, 2017

சமவேலை...சம ஊதியம் ...பேரணி ...சென்னை


சென்னை கொளுத்தும் வெயிலுக்கு ...
இணையாக கோபத்தோடு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ...
குடந்தை மாவட்டத்திலிருந்து 75 பேர் பங்கேற்ற ...
பெருந்திரள் பேரணி ...

மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில்  500 தோழர்கள் ...
மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000...பங்கேற்க ..
சமவேலை...சம ஊதியம் ...பேரணியை ...
தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் ...

சென்னை சாலைகளில் ..
இரண்டு .... " டி" அரசுகளை கண்டித்து ...
மோ "டி" மற்றும் எடப்பா "டி"
அரசுகளை கண்டித்து முழக்கம் ...
வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது ...

நிறைவில் ...
தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் ...முத்தரசன் ..
தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற ...
தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ...

மாநிலம் முழுவதும் ... TMTCLU  தோழர்கள் ...
கடும் பொருள் செலவு பாராது ..
NFTE  TMTCLU  மீதான நம்பிக்கை சுமந்து ...குவிந்தனர் ..
நம்பிக்கை ..வீண்போகாது ..எனும் நம்பிக்கையில் ...
ஜிந்தாபாத் ...

Wednesday, July 26, 2017