Thursday, August 25, 2016

போனஸ் பிள்ளையார்

Image result for vinayagar image
24.8.2016 போனஸ் கூட்டம் நடைபெற்றது 
வருடா ...வருடம் ...உயரும் ஒவ்வொரு  கோடிக்கும் ...
ஒரு ரூபாய் வீதம் போனஸ்  என கணக்கிடலாம்  ? என்பது ...
நிர்வாகத்தின் கணக்காய் இருந்தது ...
தொழிற்சங்கங்கள் இந்த கணக்கை ஏற்கவில்லை ...
ADHOC  PLI  அடிப்படையில் ...2014-2015 மற்றும் 2015 -2016 ஆண்டுக்கான ..
போனஸ் வழங்கிட வலியுறுத்தப்பட்டது ....
நிர்வாகம் 2014-2015 ஆண்டிற்கு ரூ 1100 போனஸ் தொகையென 
முன்மொழிந்தது ...
ஆனால் ...2015 -2016 ஆண்டுக்கான போனஸ் தொகையை ...
BSNL தணிக்கை (audit )முடிந்தவுடன் பார்த்துகொள்ளலாம்  ...
என்றும் நிர்வாகம் சொன்னது ...
தொழிற்சங்கங்கள் இந்த தொகையை  ஏற்கவில்லை ...
2014-2015 க்கான போனஸ் தொகையை உயர்த்திடவும்
பூஜா பண்டிகைக்கு முன்பாக போனஸ் உறுதி செய்திடவும் 
 வலியுறுத்தியததை ...தொடர்ந்து ...
செப் 5 அன்று மீண்டும் போனஸ் பேச்சு வார்த்தை தொடரும் ..
செப் 5 . விநாயகர் சதுர்த்தி ..
பிள்ளையார் அளவு பெரிய போனஸ் பெறுவதும் ..
சுண்டெலி அளவு சிறிய போனஸ் பெறுவதும் ...
செப் 2...பொது வேலை நிறுத்ததில் 
நம் பங்களிப்பே முடிவு செய்யும் ...
பெருந்திரளான  பங்களிப்பிற்கு தயார்படுவோம் .....

Wednesday, August 24, 2016

Image result for vaalthukkal
கோவையில் நடைபெற்ற AIBSNLPWA மாநிலமாநாட்டின் 

தொடர் உழைப்பு ஓய்வூதியர் 

புதிய நிர்வாகிகள் பணிசிறக்க வாழ்த்துக்கள் .

மாநிலத்தலைவர் : தோழர். இராமாராவ்

மாநிலச்செயலர் : தோழர்.முத்தியாலு 

மாநிலப்பொருளர் : தோழர்.கௌஸ் பாஷா

Sunday, August 21, 2016

உற்சாகபடுத்தும் ...பசுமை நினைவு பகிர்வுகள் ....


நமது CMD திரு .அனுபம் ஸ்ரீ வத்சாவ ...இதே போல் ...அவர் அகமதாபாத் SDO பணியில் இருந்தபொழுது ...தெருவின் குழிக்குள் ஊழியரோடு அமர்ந்து கேபிள் இணைப்பு பணிக்கு  குழிக்குள்  அமர்ந்து பணியாற்றியதை பகிர்ந்துள்ளார் ....TWITTER ல்...https://twitter.com/CMDBSNL?lang=en

KEEP IT UP FREINDS...!! IN 1985 AS SDOPII

RLP1,AHMADABAD TELEPHONES I ALSO SAT LIKE THIS

ON STREETS OF KALUPUR AREAJunior engineer is jointing underground cable with lineman and labour's...need apriciation

அதெல்லாம் ...சரி ...நம்ம மயிலாடுதுறைல கேபிள் துண்டிப்பு வாங்கன்னா.... JTO வர மறுக்கிறார் !!!...பொறையார் COLLECTION CENTRE தொடர்ந்து செயல்படாமல் உள்ளது... ரசீது வழங்கபடாமல் வாடிக்கையாளர்கள் அவதி என சொன்னால் ...செம்பனர்கோயில் SDE ..கோபமாகிறார் ...நீங்க வேற எனும் முணுமுணுப்பும் கேட்பது...புரிகிறது ...இருந்தும் விமர்சனம் மட்டும் போதாது ...இலக்கை எட்ட ....உற்சாக நல்ல உதாரணங்களும் தேவை !


Saturday, August 13, 2016

செப் 2 -பொது வேலை நிறுத்த விளக்க திரைப்படம்அவலங்களை ...அப்பட்டமாக ...கதாபாத்திரங்கள் சொல்லும்பொழுது
எத்தனை அழுக்குகுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ...
என்பது நெஞ்சில் சுருக்  என்கிறது .

க்ளீன் இந்தியா ...மதசார்பின்மை ...கட்டிங் அரசியல் ...
குவார்ட்டர் தேர்தல் ... ஊழல் ... என ...கண்முன் நடக்கும் ...
சாமானியன் பார்த்து பார்த்து ...சகித்து வாழும் அவலம் ..
சுக்கு நூறாய் கிழிக்கப்படுகிறது ...வசனங்களால் ...

குறிப்பாக பொன்னுஞ்சல் எனும் கதாபாத்திரம் ..
கிளைமாக்சில் பேசும் வசனம்  ... ஒன்று போதும் ...
சவுக்கடி ...!

மன்னர் மன்னன் , இசை ,பொன்னுஞ்சல் ,உசேன் போல்ட்  என ...
நினைவில்  நிற்கும்  கதாபாத்திரங்கள் ..

இயக்குனர் ராஜு முருகனுக்கு வாழ்த்துக்கள் 

தோழர்களே ...தோழியர்களே ....
நல்ல படங்களை திரையரங்கில் பார்ப்பது ...
இது போன்ற நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர ஒரு உற்சாக உதவி ..
திரையரங்கு சென்று கட்டாயம் காணவேண்டிய திரைப்படம் ...

என்னை பொறுத்த வரை ... இது
செப் 2 பொது வேலை நிறுத்த விளக்க படமே ...

படம் முடிந்து வெளியில் வரும்பொழுது ...
JOKKER ...ANCHOR  ஆக மாறிவிடுகிறது  !


தோழமையுடன் ... M.விஜய்ஆரோக்யராஜ் 

NFBW - தொடர் முழக்க போராட்டம் -ஆகஸ்ட் 12
வழக்கம்  போல் ...தோழர் ...தோழியர் ...
குடந்தை மாவட்டம் முழுவதும் விடுப்பெடுத்து ...
தர்ணாவில் பங்கேற்றனர் ... பங்கேற்றோர்  விகிதம்  48 %...
தலைமை செய்தார் தோழர் ஜெயராமன் TEPU 
கன்வீனர் தோழர் .விஜய் துவக்கிவைத்தார் ....
SEWA மாவட்ட தலைவர் தோழர் .கணேசமூர்த்தி ...விளக்கவுரை தந்தார் ...
PEWA மாநில செயலர் தோழர் பாலகிருஷ்ணன் கோப உரையாற்றினார் ...
AIBSNLOA மாநில செயலர் தோழர் .M .S .R  வாழ்த்தினார் ...
NFTE மாநில அமைப்பு செயலர் தோழர் .பாலமுருகன் உரை தந்தார் ...
NFTE மாவட்ட தலைவர் தோழர் .கணேசன் கோபத்தை கொட்டி தீர்த்தார் ...
மாவட்ட ,கிளை சங்க பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி பிரச்சினை சேர்த்து 
உரை நிகழ்த்தினார்கள் ...
தோழர் .சௌந்தர் சுட்டெரிக்கும் வெயிலில்
வியர்வையில் நனைந்திருந்த ...  போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் ..
அழகாக புகைப்படம் எடுக்க ...
தோழர் ராமகிருஷ்ணன் நன்றி சொல்ல ..
தோழர் .ஜெகநாதன் முழக்கமிட ...
கோப விதை தூவி ..செப் 2 வேலைநிறுத்த  விளக்க கூட்டமாகவும் ...
இனிதே ...நிறைவுற்றது ...தர்ணா .


Friday, August 12, 2016

இரண்டு செய்திகள் .

ஊதிய உயர்வை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவை: அருண் ஜேட்லி 

7-வது ஊதியக் குழு பரிந்துரையால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் கீழ் பயனடைவதால் அதிகரித்துள்ள ஊதிய உயர்வை ஈடுசெய்வதற்கு இந்த நிதியாண்டில் கூடுதலாக நிதி அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சம்பளம், படிகளை உயர்த்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கோரிக்கை

சம்பளம் மற்றும் இதர படிகளை உயர்த்த வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் நேற்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம் கோபால் வர்மா எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு எம்.பி.க்களின் சம்பளம், அரசில் உள்ள பி.ஏ.வின் (தனிப் பட்ட உதவியாளர்) சம்பளத்தை விட குறைந்து விட்டது. டெல்லி எம்எல்ஏ பெறும் சம்பளத்தை விட குறைவாகவே எம்.பி.க்கள் பெறு கின்றனர். மேலும் மகாராஷ்டிர எம்எல்ஏக்களின் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவும், தெலங்கானா எம்எல்ஏக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியும் எம்.பி.க்கள் பெறுகின்றனர்.
எங்களை தேடி வரும் மக்களை உபசரிக்க வேண்டியுள்ளது. விலை வாசி உயர்ந்து வரும்போதிலும் எங்களின் சம்பளம் உயராமல் உள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு பின், மத்திய அரசில் அமைச்சரவை செயலாளர் பெறும் சம்பளத்தை விட அதிகமாக எம்.பி.க் களுக்கு தரவேண்டும். இவ்வாறு ராம் கோபால் வர்மா பேசினார்.
ரூ.2.8 லட்சம்
ஏழாவது ஊதியக்குழு பரிந் துரைக்கு பின், அமைச்சரவை செயலாளர் ரூ.2.5 லட்சம் மாத ஊதியமாக பெறுகிறார்.
யோகி ஆதித்யநாத் தலைமை யிலான நாடாளுமன்ற குழு, எம்.பி.க்கள் மாத சம்பளம் மற்றும் படிகளை இரு மடங்காக உயர்த்த அதாவது ரூ.2.8 லட்ச மாக நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் காங்கி ரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசும் போது, “நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும் அரசு அமைதி காத்து வருவது இதுவே முதல்முறை. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங் களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை” என்றார்.

.

ரிலையன்ஸ் ஜியோ சேவையை நிறுத்த வேண்டும்: தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புகார்

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 4 ஜி சேவையை நாடு முழுவதும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.
ஆர் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு விதிமுறைகளை புறக்கணித்து திடீரென 15 லட்சம் பயனாளிகளுக்கு சோதனை சேவை என்கிற பெயரில் முழுமையான சேவையை வழங்க வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதியிட்ட இந்த கடிதம் தொலைத் தொடர்பு துறை செயலர் ஜே எஸ் தீபக்கிற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் துக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியில் சோதனை முறையிலான சேவையின் போது அதிக எண்ணிக்கையில் இலவச குரல் வழி சேவை மற்றும் தகவல் சேவை வழங்கக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் ஆர் ஜியோ நிறுவனம் இந்த கட்டுப்பாடுகளை மீறி தீவிரமாக சலுகைகளை அறிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது சோதனைக்காக அல்ல, சோதனை சேவை என்கிற பெயரில் முழுமையான சேவையில் இறங்குகிறது. இதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொது இயக்குநர் ராஜன் மாதேவ்ஸ், இது விதிமுறைகளை மீறு வது மற்றும் தொலைதொடர்பு கொள்கை அம்சங்களை திறமைக்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் செய லாகும் என்று கூறியுள்ளார். குறிப் பாக நியாயமான போட்டி போன்ற வற்றை மீறுவதாகும் என்றும் குறிப் பிட்டுள்ளார். இந்த கடிதத்துக்கு முக்கிய தொலைதொடர்பு நிறுவ னங்களான பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த கூட்டமைப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனம் இந்த மாதத்தில் தனது வர்த்தக ரீதியான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது என்கிற எதிர்பார்ப்பு உள்ளது என அந்த கடிதத்தில் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது தனது 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல்வழி சேவை மற்றும் இலவச டேட்டா சேவையை அளிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சோதனை சேவை என்கிற அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட முழுமையான வர்த்தக சேவையை இந்த மாதத்தில் தொடங்க உள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போது சோதனை அடிப்படையில் 20 எல்வொய்எப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும், 14 சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் மூன்று மாதங்களுக்கு எல்லையில்லா சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் இந்த சேவையை தனது பணியாளர்களுக்கு வழங்கியது. அடுத்தடுத்து சில்லரை வாடிக் கையாளர்களுக்கும் கொண்டு வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து சேவைகளையும் நிறுத்தி வைக்க வேண்டுமென தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளன.
உள்நோக்கம் கொண்டது: ஜியோ விளக்கம்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் கடிதம் உள்நோக்கம் கொண்டது என ஆர் ஜியோ கூறியுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் புகாருக்கு பதிலளித்துள்ள ஆர் ஜியோ, வன்மமான, ஆதாரமற்ற, தவறான தகவல்களுடன் உள்நோக்கமான புகார் என கூறியுள்ளது. ஏற்கெனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் உள்நோக்கத்துடன் இதை ஊதிப் பெருக்குகின்றன என்று கூறியுள்ளது. கூட்டமைப்பு வேண்டுமென்றே தேவையற்ற இழிவுபடுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மட்டும் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்யவில்லை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறியுள்ளது